முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நீட் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று 1,138-வது இடத்தில் தேர்வு பெற்றுள்ள தமக்கு மருத்துவ சேர்க்கைக்கான தகுதி பட்டியலில் 50 சதவீதம் வருவதாகவும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறி போனதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சிவபாலமுருகன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார்.

இதை ஏற்று வரும் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவ கலந்தாய்வு முடிந்து விட்டதாக கூறிய உச்சநீதிமன்றம், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கூடுதல் அவகாசம் தர முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து