முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வலுவானது - ஆஸி. கேப்டன் ஸ்மித் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : இந்தியா சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சில் மிகவும் வலுவானது என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சுமார் 30 வருடத்திற்குப் பிறகு சென்னை மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 281 ரன்கள் சேர்த்தது. மழைக் குறுக்கீட்டால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ஓவரில் 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 21 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பும்ரா 1 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதனைப் பயன்படுத்தி சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினர். இரண்டு விரிஸ்ட் பந்து வீச்சாளர்கள் சுழலில் ஆஸ்திரேலியா சிக்கித்தவித்தது. என்றாலும் தோல்விக்குப்பின் ‘‘சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சில் இந்தியா வலுவானது’’ என ஆஸி. கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘நாங்கள் நிச்சயமான ரிஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் கவனம் செலுத்தவில்லை. வலைப்பயிற்சியில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பயிற்சி மேற்கொண்டோம். வலைப்பயிற்சியில் சுழற்பந்தை மட்டும் நோக்கமாக கொண்டு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்தியா சில தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான தொடருக்கு முன்பே, ஆஸ்திரேலியா வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். இலங்கை தொடரின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி நக்குல் பந்துகளை வீசினார்கள் என்பதை வீடியோ மூலம் பார்த்து கண்டறிந்தோம்.

சென்னை போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியது எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. 20 ஓவர்கள் போட்டியில் விக்கெட்டுக்களை விரைவில் இழந்துவிட்டால், இலக்கை எட்டுவது மிகவும் கடினம். நாங்கள் விரும்பியது போல் பேட்டிங் அமையவில்லை. கொல்கத்தா போட்டிக்கு முன் எங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களில் இருந்து மீண்டு வருவோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து