முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே பலத்த மழையினால் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்து தரைமட்டம்:

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெய்த பலத்த மழையினால் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான சி.எஸ்.ஐ.,கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.இதில் சாத்தங்குடி உறவின்முறையைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் ஆராதனை முறைமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆலயத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மணிக்கூண்டு மற்றும் கட்டிடத்தின் சிலபகுதிகள் பலமிழந்து காணப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலய ஆராதனை மற்றும் மாலை வழிபாடு முடிந்த பின்பு நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலயத்தை பராமரித்து புதுப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாத்தங்குடி பகுதியில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழையினால் பலமிழந்து காணப்பட்ட ஆலயத்தின் மணிக்கூண்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் இடிந்து ஆலயத்தின் மேல விழுந்துள்ளது.இதையடுத்து ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் ஒரே சமயத்தின் இடிந்து விழுந்து தரைமட்டமானது.சம்பவம் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டதால் ஆலய இடிபாடுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.மழையினால் பலமிழந்து இடிந்து தரைமட்டமான இந்த கிறிஸ்தவ தேவாலயத்தை சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாகிகள்,ஆலய நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் பார்வையிட்டுச் சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து