முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காப்புகட்டுதலுடன் துவங்கப்பட்டு,தினசரி ஒவ்வொரு திருக்கோலத்தில் பர்வதவர்த்தினி அம்மன்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழச்சி நடைபெறவுள்ளது.
  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று செவ்வாய் கிழமை காலையில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள கொழு மண்டபத்தில் காப்புகட்டுதலுடன் துவங்கப்படவுள்ளது.இத்திருவிழாவை முன்னிட்டு 11 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பர்வதவர்த்தினி அம்மன் தினசரி  ஒவ்வொரு திருக்கோலத்தில் அவதாரம் எடுத்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும்,தொடர்ந்து அம்மன்  சன்னதியில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும்,  தீபாராதணை வழிபாடுகள் தினசரி மாலை நடைபெறவுள்ளது.நிகழ்ச்சியில் தொடர்ந்து கொழுமண்டபத்தில் பெண் பக்தர்கள் விரதமிருந்து நடத்தும் பக்தி பரவசத்துடன் பஜனை நிகழ்ச்சியும்,சுவாமி,அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என திருக்கோயில் இணைஆணையர் மங்கையர்க்கரசி திங்கள் கிழமை தெரிவித்தார்.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து