முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மின்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்அமைச்சர் தங்கமணி, அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மின்பகிர்மான மற்றும் தொடர் அமைப்பு தலைமை பொறியாளர்கள் கலந்துகொண்டனர். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தேவையான மின் உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் போதுமான அளவு இருப்பில் இருக்கும்படி ஆலோசனை வழங்கினார்.

மேலும், பருவமழை காலங்களில் சீரான மின்சாரம் தங்கு தடையின்றி அனைத்து மின்நுகர்வோர்களுக்கும் கிடைக்கின்ற வகையில் துரிதமான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாய்குமார், மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாரிய இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து