முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 3.34 கோடி மதிப்பீட்டில் 5 மனநல சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வேலூர், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும்திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் மனநல சிறப்பு பிரிவுகள்ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அ தூய்மையே சேவை இயக்கத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் \மக்கள் நோய்களின்றி வாழ்வதற்கு சுற்றுப்புற தூய்மை மிகவும் முக்கியம். தூய்மையே சேவைஇயக்கத்தின் சார்பில் தூய்மையான மருத்துவமனைகள், தரமான சேவைகள் என்னும் திட்டம் அறிமுகம்செய்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உன்னதமான மருத்துவசேவையோடு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும்மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். கீழ்பாக்கம் அரசுமனநல காப்பகத்தில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவத்துறைபணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனையில்பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மனிதநேயத்தோடும்,அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வருவதால் கடந்த 3 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட மனநலநோயாளிகள் சிகிச்சை முடிந்து நலமுடன் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்துவைக்கப்பட்டுள்ளனர். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகள் மலர்கொத்த தயாரித்தல், கூடை பின்னுதல், பிரட் தயாரித்தல் ஆகியவற்றுடன் தோட்டங்கள் பராமரிப்பிலும் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் அவர்களுக்கு யோகா மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவருகிறது.மனநல சேவையில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவிலேயேதமிழ்நாட்டில் மட்டும்தான் 32 மாவட்டங்களிலும் மாவட்ட மன நலத் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவது வரலாற்று சாதனையாகும். மேலும்அரசால் வேலூர், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும்திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் மனநல சிறப்பு பிரிவுகள்ஏற்படுத்தப்படும். இதன் மூலம் தமிழகத்தில் மன நல சேவை மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார், .

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர். ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு, அரசு மனநல காப்பக இயக்குநர். சாந்திநம்பி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து