முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாடம்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -தினகரன் அணி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதியில் அதிமுக எடப்பாடி அணியினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த வாடிப்பட்டி, சேவுகம்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர், சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் மாசானம் தலைமையில் அவைத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட மீனவரணி பொருளாளர் முருகேசன், வார்டு செயலாளர்கள் 2வது வார்டு பாண்டி, 11வது வார்டு கருப்பையா, 9வது வார்டு சுப்பன், 12வது வார்டு முத்துராமன், மற்றும் அய்யாவுத்தேவர், மற்றும் சேவுகம்பட்டி பேரூராட்சி அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே அதிமுக ஒன்றியம் மற்றும் நகரம் சார்பாக தினகரன் அணி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குயில் அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பீர்முகமது முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் வளர்மதி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும் மக்கள் சேவகருமான நாகூர்கனி, ஒன்றிய மீனவரணி செயலாளர் ரத்தினம், மாவட்ட மீனவரணி பொருளாளர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சுதாகர், ஜெயப்பிரகாஷ், மாசாணம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வினோத்கண்ணா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் அழகுமலை, கூட்டுறவு சங்க இயக்குனர் நல்லமுகமது, அதிமுக நிர்வாகிகள் மூர்த்தி, வெங்கடேஷ், சதீஷ்குமார், கிருபாகரன், ராஜபாண்டி, மணிப்பிள்ளை, அஷ்ரப்அலி, சிறுபான்மை ஒன்றிய செயலாளர் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து