முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 வருடங்களை தொட்ட யுவராஜ் சிங் சாதனை

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசி யுவராஜ் சிங் சாதனை செய்து நேற்றோடு பத்து வருடமாகிவிட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தது இந்தியா. மிடில் ஆர்டரில் களமிறங்கினார் யுவராஜ் சிங். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஃபிளிண்டாப் பந்துவீச்சில், யுவராஜ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் அடுத்தடுத்து. கோபமான அவர், யுவராஜை ஏதோ திட்ட, கடுப்பாகிவிட்டார் யுவி. அடுத்த ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். ஃபிளிண்டாப் மீதான கோபத்தை, பிராட் பந்திடம் காண்பிக்க ஆரம்பித்தார் யுவி. பந்தை பறக்கவிட்டுவிட்டு ஃபிளிண்டாப் முகத்தைப் பார்த்தார் யுவி. ’ஏன்டா திட்டினோம்’ என்று நினைத்தபடி தலையை தலைகவிழ்ந்தார் அவர்.

ஒவ்வொரு பந்தையும் அவர் சிக்சருக்கு விரட்ட, சிலிர்த்தனர் ரசிகர்கள். ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்திய யுவிக்கு ஏராளமான பாராட்டுகள். ஆனால் நொந்து போனார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். யுவராஜ், ஃபிளிண்டாப், பிராட் ஆகியோருக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது அது. இந்த போட்டி நடந்து நேற்றோடு சரியாக பத்து வருடம் ஆகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து