முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் சுமார் 1 இலட்சம் மாணவ, மாணவிகள் தூய்மையே சேவை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- தூய்மையே சேவை பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தை துரிதப்படுத்துதல் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தை ஊக்கப்படுத்துதல், ஒவ்வொரு குடிமகனும் இத்திட்டத்தில் தன்னை ஒரு அங்கமாக ஈடுபடுத்த உறுதி செய்தல் போன்றவை ஆகும்.
  மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் காலை சரியாக 11 மணியளவில் தூய்மையே சேவை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
  அதன் ஒரு பகுதியாக மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
  பாரத பிரதமர்   ஆணைக்கிணங்க ளுறயஉh டீhயசயவா ஆளைளழைn ல் ஒரு பங்காக தூய்மையே சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான அறிவுரையின் பேரில் நமது மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகள், கல்லூரிகள், பள்ளிகள், சுகாதார வளாகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 
  மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்களே முன்வந்து தங்களது பள்ளி மற்றும் கல்லூரியை தூய்மையாக வைத்தக்கொள்ள வேண்டும்.  நீங்கள் பயிலும் கல்லூரி  பள்ளி மதுரை மாவட்டத்தில் ஒரு முன்மாதிரியானவையாக திகழ வேண்டும்.  மாணவர்களாகிய நீங்கள் நமது தாய்நாட்டிற்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களால் இயன்ற அளவில மரக்கன்றுகளை நடுங்கள்.  மேலும் பூமித்தாயின் இயற்கை வளங்களை கொல்லும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தாதீர்கள்.  நாட்டின் வளர்ச்சிக்கு உங்களால் முயன்ற அளவிற்கு பாடுபடுங்கள்.  நமது மதுரை மாவட்டத்திற்கு பெரும் அடையாளமாக திகழும் வைகை நதியை புனரமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவின் முக்கிய நோக்கமாக 5 திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  வைகை நதியில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றுவது, கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் மூலம் அகற்றுவது, வைகை நதிக்கு வரக்கூடிய நீர்வரத்து பாதைகளை சரிசெய்வது, வைகை ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகளை நடுவது, வைகை ஆற்றின்; தண்ணீர் ஓட்டத்தினை சரிசெய்வதற்கு வழிவகை செய்வது ஆகும். 
  மேலும் வருகின்ற 28.09.2017 அன்று வைகை நதியை சுத்தம் செய்ய ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் நானும் கலந்து கொண்டு இப்பணியை செய்ய உள்ளோம்.  இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
      பின்னர் டோக் பெருமாட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவிகளுடன் சேர்ந்து மேற்கொண்டார்.  அதனைத்தொடர்ந்து சொக்கிகுளத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரி விடுதியில் தூய்மையே சேவை உறுதிமொழி எடுத்தல் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  பின்னர் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற தாண் அறக்கட்டளை நிகழ்ச்சியில் தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. 
  இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.அனீஷ் சேகர்,  திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) (பொ) அருண்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகசெல்வி, உதவி திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமை) சேகர், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் முனைவர்.கிறிஸ்டியானாசிங், துணை முதல்வர் ரேச்சல் ரெஜி டேனியல், பேராசிரியர்கள், ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து