முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் முதல் ராமேசுவரம் வரை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள்: மூன்றாவது நாளாக இவ்வழியாக செல்லும் இரண்டு பயணிகள் ரயில்கள் ரத்து.

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,செப்,20:  மண்டபம் முதல் ராமேசுவரம் வரை ரயில் பாதையில் தண்டவாளங்கள் சிரமைப்பு பணிகளும் பாம்பன் ரயில் பாலத்திலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனையொட்டி இவ்வழியாக பகலில் செல்லும் இரண்டு ரயில்கள் மூன்றாவது நாளாக  ரத்து செய்யப்பட்டுள்ளது.
      ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பாம்பன் பாலம் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலையம் வரை  அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்கள் மாற்றும் பணிகள் கடந்த தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதுபோல பாம்பன் கடலில் இரண்டு கிலோ மீட்டர் தொலை தூரத்தில் அமைக்கப்பட்டு ரயில் பாலத்தில் கடல் காற்றினால் அரிப்பு தன்மை ஏற்பட்டு சேதமடைந்து வந்த தண்டவாளங்கள் மற்றும் தண்டவாளங்களை தாங்கி நிற்கும்  இரும்பு கர்டர்கள் இணைப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பிளேட், தண்டவாளங்களை தாங்கி நிற்கும் இரும்பு கட்டைகள் மற்றும் கப்பல் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலம் ஆகிய பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது.அதுபோல தண்டவாளங்களை தாங்கி நிற்கும் இரும்பு கட்டைகள் கடல் காற்றின் உப்பத்தன்மை பிடித்து துருப்பிடித்து சேதமடைந்து வந்தது.இதனையொட்டி அப்பகுதிகளில் ரசயாண கலவைகூடிய வர்ணம் பூசும் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனையொட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.அதுபோல ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் பயணிகள் ரயில் 11.50 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்கின்றது.இந்த இரண்டு ரயில்களும் பணிகளுக்கு இடையூற ஏற்பசுவதால் இவ்வழியில் செல்வதை நிறுத்தப்பட்டது.மேலும் இவ்வழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்கு ரயில்வே நிர்வாகம் திட்டமி்டடுள்ளதால் இந்த இரண்டு ரயில்களும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மண்டபம் முதல் ராமேசுவரம் வரை செல்லாது என ரயில்வை நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆதலால் பாம்பன் ரயில் பாலம் உள்பட அனைத்து பகுதியிலும் விமர்சையாக பணிகளில் ரயில்வே  ஊழியர்களை ஈடுபட்டு வருகின்றனர்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து