முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா விவகாரம்: சீனா, ரஷ்யாவுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஜெனிவா: வடகொரியாவுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை ‌எடுக்கும்படி சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் மக்ரோன் செய்தியாளர்களை சந்தித்து சர்வதேச பிரச்னைகளில் தாம் எடுத்துள்ள நிலைப்பாட்டை விவரித்தார். அப்போது வடகொரியா விவகாரம் குறித்து பேசிய அவர், வலுவான தடைகளை விதிப்பதன் மூலமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார். எனவே சீனாவும், ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார். ‌இதேபோல் சிரியா மற்றும் ஈரான் விவகாரம் குறித்த தனது நிலைப்பாட்டையும் அவர் விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து