முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சியை கலைக்கும் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது - நாகையில் முதல்வர் எடப்பாடி ஆவேச பேச்சு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

நாகை : இந்த ஆட்சி கலைந்துவிடாதா ? இந்தக் கட்சி உடைந்துவிடாதா ? என்று பகல்கனவு கண்டிருப்பவர்களின் எண்ணம் நிச்சயம் ஒருபோதும் பலிக்காது என்று நாகையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

நாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.,

16.2.2017 அன்று நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். கிட்டத்தட்ட இந்த 7 மாதங்களில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வாரி வழங்கியிருக்கின்றோம்.  அம்மாவினுடைய திட்டங்களை இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.  இந்த 7 மாதங்களில், என்றைக்கு பார்த்தாலும், இந்த ஆட்சியை குறை சொல்வது தான் அவர்களுடைய வாடிக்கையாகி விட்டது. ஆட்சியைக் குறை சொல்கின்ற பொழுது நாங்கள் அதற்கு பதில் சொல்கின்ற கட்டத்திலே இருக்கின்றோம்.  அதற்கு பதில் சொல்கின்ற விதமாகத் தான் சொல்கின்றோமேயொழிய, அரசியல் மேடையாக நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்.  எம்.ஜி.ஆர்.  வகுத்த பாதையில், அம்மா வழிவகுத்த கொள்கையில் என்றைக்கும் பிறழமாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு அரசியல் பேசுகின்றார்கள் என்று சொல்வது தவறு என்று இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, இன்றைக்கு அம்மாவினுடைய ஆட்சியிலே போடப்பட்ட திட்டம், புரட்சித்தலைவர் ஆட்சியிலே போடப்பட்ட திட்டங்களெல்லாம்  காட்சியாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எத்தனை பொய் சொன்னாலும், மாறி மாறி பொய் சொன்னாலும் அது உண்மையாகிவிடும் என்று கருதுகின்றீர்கள்.  அது ஒருபோதும் நடக்காது. இப்படித்தான் பேசுவார்கள் என்று எண்ணிதான் கைத்தறித் துறை அமைச்சர்,  ஓ.எஸ்.மணியன், இங்கே வந்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், அம்மாவினுடைய ஆட்சியிலே போடப்பட்ட திட்டங்கள் எத்தனை என்பதை பாருங்கள் என்று மக்கள் அறிவதற்காக இந்த அரங்கங்களை அமைத்திருக்கின்றார்கள். ஆகவே, இந்தத் திட்டங்களெல்லாம் மக்களுக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கின்றன. பொறாமை, பொறுக்க முடியவில்லை, ஆகவே, இந்த ஆட்சி கலைந்துவிடாதா, இந்தக் கட்சி உடைந்துவிடாதா என்று  பகல்கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள், நிச்சயம் ஒருபோதும் நடக்காது. 

இந்த அரங்கிலே ஒன்றரை லட்சம் மக்கள் குழுமியிருக்கின்றார்கள். ஆகவே, இந்த மக்கள் அத்தனைபேரும், அம்மாவினுடைய ஆட்சி தொடரவேண்டும் என்று எண்ணி வாழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய  வாழ்த்துக்கு முன்னால் உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது.  ஆகவே, அனைத்திந்திய கழகத்தை அழிக்கின்றவர்கள், இந்த  ஆட்சியை கவிழ்க்கின்றவர்கள் எண்ணுகின்ற எண்ணமெல்லாம் இன்றைக்கு பகல் கனவாக ஆகிவிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். 

அதுமட்டுமல்ல,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய ஆட்சியிலே பல்வேறு திட்டங்களை தந்திருக்கின்றோம்.  அவ்வளவு திட்டங்களை தந்த காரணத்தினால் தான் மக்கள் எங்களை நம்புகிறார்கள், மக்கள் எங்களை நம்யி காரணத்தினால் தான் இந்த அரங்கம் நிரம்பி வழிந்து, மக்கள் வெள்ளம் சாலை நெடுகிலும் இன்றைக்கு பார்க்கின்றோம்.  ஆகவே, ஒரு அரசு நன்றாக இருந்தால் தான் அந்த மக்கள் பேராதரவு கிடைக்கும்.  அந்த பேராதரவு எப்படி கிடைக்கும் என்றால், இப்படிப்பட்ட கூட்டத்தின் வாயிலாக பார்க்கின்றபொழுது, இந்த அரசுக்கு மக்கள் பலம் இருக்கிறது என்பதை இந்த நாகை மாவட்டத்தில் நடைபெறுகின்ற கூட்டமே சாட்சி. அது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, அம்மாவினுடைய ஆட்சியிலும் சரி, கல்விக்கு மிக முன்னுரிமை கொடுத்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து