முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ஃபேஸ்புக் மற்றும் ஸ்நாப்சாட் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், மிகச் சிறந்த குழுவுடன் பணியாற்ற உள்ளேன் என்று கூறியுள்ளார்.

சிலிகான் பள்ளத்தாக்கில் முக்கிய தலைவராக உள்ள ஸ்ரீராம், தொழில்நுட்ப துறையில் மிக சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறார். இவரது வருகை குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே, `வெல்கம் ஹோம்’ என திங்கள் கிழமை ட்விட் செய்துள்ளார்.

அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து ட்விட்டரில் பொறுப்பேற்க உள்ளார். டைம் லைன், டைரக்ட் மெசேஜ் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார். ட்விட்டர் நிறுவனத்தின் புராடக்ட் பிரிவு துணைத் தலைவர் கெய்த் கோல்மெனுக்கு அடுத்த படியாக இவர் பொறுப்பு வகிப்பார்.

கிருஷ்ணன் ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியேறினார். அதன் பின்னர் ஸ்நாப்சாட் செயலியின் தாய் நிறுவனமான ஸ்நாப் நிறுவனத்தின் இணைந்தார். பின்னர் அங்கிருந்து பிப்ரவரி மாதத்தில் வெளியேறினார்.

நிறுவனத்தின் விளம்பர நெட்வொர்க் மற்றும் பார்வையாளர் நெட்வொர்க் விரிவாக்கத்துக்கு இவரது பங்களிப்பு உதவியாக இருந்தது என ஃபேஸ்புக் மற்றும் ஸ்நாப் நிறுவனங்கள் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து