முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களையே மிரட்டுவதா? வடகொரியாவை அழிப்போம் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்தால் வடகொரியாவை முழுமையாக அழித்து விடுவோம் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் முதல்முறையாக டிரம்ப் நேற்று பேசியதாவது:
ராக்கெட் மனிதர் (வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்) தன்னையும் தனது ஆட்சியையும் அழித்து கொண்டு வருகிறார். வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா மிகுந்த பொறுமை காத்து வருகிறது. ஆனால் அமெரிக்காவுக்கோ, அதன் நட்பு நாடுகளுக்கோ மிரட்டல் விடுக்கப்பட்டால் வடகொரியாவை முழுமையாக அழித்துவிடுவோம். அதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

வடகொரியா மீது தற்போது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு சீனா ஆதரவு அளித்து வருவதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு வடகொரியாவை முற்றுலுமாக தனிமைப்படுத்த வேண்டும்.

ஈரான் அரசு தீவிரவாதி களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஈரானின் எண்ணெய் வளம் அனைத்தும் சிரியா, ஏமன் தீவிரவாதிகளுக்கு வாரியிறைக்கப் படுகிறது. இதன்மூலம் ஈரான் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்.வெனிசூலா அரசு சொந்த மக்களையே கொன்று குவித்து வருகிறது. அந்த நாட்டு சர்வாதிகார ஆட்சியை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிபர் டிரம்ப் பேச தொடங்குவதற்கு முன்பாக வடகொரிய தூதரக அதிகாரிகள் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து