முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் சித்தார்த்தா நிறுவனத்தில் வருமானவரி சோதனை

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனும் கபே காபி டே நிறுவன உரிமையாளருமான சித்தார்த்தா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை  சோதனை  நடைபெற்றது.

பெங்களூர், சென்னை, மும்பை, சிக்மகளூரிலுள்ள சித்தார்த்தாவுக்கு தொடர்புள்ள 20 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று ஐ.டி அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது, பராகுவே, வியன்னா, மலேசியா நாடுகளிலும் மொத்தம் 1550க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ள கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா. கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை இவர் திருமணம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதல்வராக விளங்கி ஐ.டி துறையில் பெரும் புரட்சியை உருவாக்கியவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதன்பிறகு மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மகாராஷ்டிரா ஆளுநராக்கப்பட்டார். ஆனால் கர்நாடகாவில் கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் கட்சி அவரை புறக்கணித்துவிட்டது. இதையடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் கிருஷ்ணா பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து