முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கமாக பேசுவது மாநில சுயாட்சி, வழக்கு நடத்த வடநாட்டு வழக்கறிஞரா? வழக்கமாக பேசுவது மாநில சுயாட்சி தி.மு.கவுக்கு பா.ஜ.க தலைவர் தமிழிசை கேள்வி,

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: மாநில சுயாட்சி பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டு வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வழக்கறிஞரா என்று தி.மு.கவை சாடி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பங்கேற்று இரண்டு முறை வாதாடியுள்ளார். இந்நிலையில் தி.மு.கவை சாடி தமிழிசை இந்த கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 தமிழிசை சவுந்திரராஜன் டவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியுள்ளதாவது : வழக்கமாக பேசுவது மாநில சுயாட்சி, வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வழக்கறிஞரா. தமிழா! தமிழா! வாய்தா வாங்கத்தான் நம்ம ஊர் வக்கீல்? வக்கற்றவர்களா நாம்? என்று கேட்டுள்ளார்.

நவோதயா பள்ளி தி.மு.க கிராமத்து ஏழைகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரமான இலவச கல்வி தரும் நவோநயாபள்ளிகளை எதிர்ப்பார்கள் சி.பி.எஸ்.சி மெட்ரிக்பள்ளி நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவர்னரை கண்டித்து தி.மு.கவினர்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

காவிரி பிரச்சினை மத்தியில் 18 ஆண்டுகளும், தமிழகத்தில் 25 ஆண்டுகளும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, காவிரி பிரச்சனையை ஏன் தீர்க்கவில்லை? என்றும் தமிழிசை கேட்டுள்ளார். காவிரி பிரச்சனையில் திமுக வின் கடந்த கால துரோக வரலாறை மறக்கமுடியுமா? அந்தத் துரோகம் காரணமாகவே இன்று சிக்கலை சந்திக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

எங்கே போனது இதே போல திருமாவளவனை கேள்வி கேட்டுள்ளார். இலங்கைத்தமிழர்களை கொன்று குவிக்க துணைநின்ற சோனியாகாங்கிரசை தேடிச்சென்று சுயாட்சிக்கு துணைதேடும் திருமாவே ? எங்கே போனது இலங்கைத்தமிழர் மீதானபாசம்? என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து