முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஹிங்கியாக்கள் அகதிகள் அல்ல சட்டவிரோதமாக குடியேறியவர்கள் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ரோஹிங்கியாக்கள் அகதிகள் கிடையாது, அவர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பிக்காமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜ்நாத், ''ரோஹிங்கியாக்களை மியான்மர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும்போது, அவர்களை இந்தியா நாடு கடத்துவது குறித்து ஏன் சிலர் மறுப்பு தெரிவிக்கின்றனர்?

அவர்கள் அகதிகள் அல்ல. ரோஹிங்கியாக்கள் அனைவரும் முறையான நடைமுறைகள் மூலம் இங்கு வரவில்லை. ரோஹிங்கியாக்கள் யாரும் அடைக்கலம் கோரி விண்ணப்பிக்கவும் இல்லை. அவர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்'' என்றார்.

முன்னதாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ரோஹிங்கியாக்களை நாடு கடத்தும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து