முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக எல்லையில் மாவோயிஸ்ட் கைது

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக கேரள வனப்பகுதியில் கேரள போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய நபரான பரமக்குடியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தமிழக கேரள எல்லையான அட்டப்பாடி, சைலண்ட்வேலியில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கேரள வனத்துறையினர், போலீஸார் மீதான அவர்களது தாக்குதலை அடுத்து கேரள போலீஸார் 'தண்டர்போல்ட்' படையை உருவாக்கியுள்ளனர். இவர்களது இயக்கங்களை ஒடுக்க தமிழக கேரள போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அதையும் மீறி சமீப காலமாக மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. தமிழக கேரள கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் அவர்கள் தங்கள் இயக்கத்தைப் பலப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் போலீஸார் தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையேயான மோதல்கள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று (வியாழன்) காலை தமிழக எல்லையோர கேரள அகளி வனப்பகுதியில் மாவோயிடஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரைக் கேரள போலீஸார் கைது செய்தனர். இவர் பரமக்குடியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் எனக் கூறப்படுகிறது. அவரிடம் பாலக்காடு மாவட்டம் அகளி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து