முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: ஐ.நா. சபையின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அணு ஆயுதங்களை தடை செய்யக் கோரி ஐ.நா. சபையில் கடந்த ஜூலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 122 நாடுகள் ஆதரவு அளித்தன. அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த தீர்மானம் ஐ.நா. சபையில் நேற்று முன்தினம் ஒப்பந்தமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 50 நாடுகள் கையெழுத்திட்டன. இவற்றில் எந்தவொரு நாட்டிடமும் அணு ஆயுதங்கள் கிடையாது.

இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது:
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ராணுவம் ஜப்பானில் 2 அணு குண்டுகளை வீசியது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. பனிப்போர் காலத்தைவிட தற்போது அணு ஆயுத போர் அபாயம் அதிகமாக உள்ளது. அணு ஆயுதம் இல்லாத உலகம் உருவாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் முதல்கட்டமாக 50 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து