முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக போர்ச்சுக்கல் பிரதமர் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு போர்ச்சுக்கல் பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ லூயிஸ் டா கோஸ்டா பேசியதாவது:
நிலையான அமைதி நிலவ பரந்த ஒத்துழைப்பும் குறிக்கோளும் தேவைப்படுகிறது. இன்றைய உலகின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். பாதுகாப்பு சபையில் ஆப்பிரிக்க கண்டம் நிரந்தர இடம் பெறுவதை மறுக்க முடியாது. இந்தியாவும் பிரேசிலும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும். உலக அளவில் சந்திக்கும் சிக்கலான பிரச்சினைகளை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. அவற்றுக்கு தீர்வு காண பரஸ்பர ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இவ்வாறு அன்டோனியோ பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி லிஸ்பன் சென்று வந்த நிலையில், இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தெரிவித்து போர்ச்சுக்கல் பிரதமர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து