முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 அணிகள் இணைந்ததற்கான கடிதம் வழங்கப்பட்டது: அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான நகல்கள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க அணிகள் இணைந்ததற்கான கடிதம் வழங்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை அமைச்சர்கள், நிர்வாகிகள் தேர்தல் கமி‌ஷனில் நேற்று நேரில் தாக்கல் செய்தனர். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைப்பு குழு

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகு கடந்த 12-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார்கள். இதில் பொதுச்செயலாளர் சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்றனர். கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஆவணங்கள் தாக்கல்

இந்த தீர்மானங்களை தேர்தல் கமி‌ஷனில் சமர்ப்பிக்கவும், கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னத்தை பெற தேவையான ஆவணங்களை வழங்கவும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதய குமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றனர். பகல் 12.30 மணிக்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை நேரில் சென்று பொதுக்குழு தீர்மான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

அமைச்சர் பேட்டி

இதுதொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில்., தேர்தல் ஆனையம் எங்களுக்கு அனுப்பிய நோட்டீசில் சில விவரங்களை கேட்டிருந்தார்கள். அவை அனைத்துக்கும் நாங்கள் விரிவாக பதில் தெரிவித்திருக்கிறோம். பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். உண்மையான இயக்கம் எங்களது இயக்கம் தான் என்பதை நிரூபித்து இரட்டை இலையை பெறுவோம். கோர்ட்டில் நடைபெறும் வழக்கிற்கும் நாங்கள் தேர்தல் கமி‌ஷனில் ஆவனங்களை தாக்கல் செய்வதற்கும் சம்பந்தமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கடிதம் வழங்கப்பட்டது

தேர்தல் ஆணையத்தில் ஒ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணியினர் இணைந்து தாக்கல் செய்துள்ள கடிதத்தில், அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என்றும் அணிகள் இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்துவிட்டதால், கட்சி சின்னத்தில் எங்களுக்கே உரிமை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இரு அணிகளாக இருந்த போது தாக்கல் செய்த அனைத்து பிரமாண பத்திரங்களையும் வாபஸ் பெறுகிறோம் எனவும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் முதல்வர் அணி தெரிவித்துள்ளது.  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இறுதியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை ஐகோர்ட் உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.கே.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அக். 6-ல் விசாரணை

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமிஷன் வருகிற அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடத்த இருக்கிறது. இது குறித்து தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் மற்றும் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு தேர்தல் அணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தங்கள் தரப்பிலான ஆவணங்களை ஏதாவது தாக்கல் செய்வதாக இருந்தால் அவற்றை வருகிற 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து