முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து அ.தி.மு.க ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் சதித்திட்டம்: முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த வசந்தி முருகேசன் எம்.பி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து அ.தி.மு.க ஆட்சியை கலைக்க தினகரன் சதித்திட்டம் மேற்கொண்டுள்ளதாக தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வருக்கு ஆதரவு

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தென்காசி அ.தி.மு.க எம்.பி வசந்தி முருகேசன் நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்தார். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வசந்தி முருகேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்யான குற்றச்சாட்டு

தனக்கு பின்னும் அ.தி.மு.க 100 ஆண்டுகள் ஆட்சியை தொடர வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அவரது ஆசைப்படி இந்த அரசு மேலும் 100 ஆண்டுகள் தொடரவேண்டும் என்பது எங்களின் ஆசை. ஆனால் ஜெயலலிதா உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கலைத்து விடுவேன் என தினகரன் மிரட்டுகிறார். இதனை எப்படி ஏற்று கொள்ள முடியும் இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்து தந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மிகசிறப்பாக செம்மையாக செயல்படுத்தி வருகிறது. இதனை மக்களும் நன்கு அறிவார்கள். ஆனால் இந்த அரசு எதையும் செய்யவில்லை எனவும், ஊழல் செய்துவிட்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார்.

தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி ...

தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை சிறை பிடித்து வைத்து கொண்டு, அ.தி.மு.க அரசை அழிக்கும் நடவடிக்கைகளிலும் , கலைக்கும் முயற்சியிலும் தினகரன் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்து ஜெயலலிதா அமைத்த இந்த ஆட்சியை அழிக்க நினைக்கிறார், தினகரன் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தினகரனுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து கொண்டேன் தினகரன் பிடியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து