முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் எடப்பாடி - துணை முதல்வர் ஒ.பி.எஸ். பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, கிருஷ்ணகிரியில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ். ஆகியோர்  பங்கேற்கின்றனர். ரூ.65 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழா இன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.66.13  கோடி மதிப்பிலான 242 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.327.14 கோடி மதிப்பிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும்,  33,131 -  பயனாளிகளுக்கு ரூ.65  கோடியே 75 லட்சம்  மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கின்றார். மக்களவை துணைத் தலைவர்  மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலை வகிக்கிறார்.  இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, கிருஷ்ணகிரி  நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம்நாகராஜ், பர்கூர்  சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வரவேற்புரையாற்றுவார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் நன்றியுரையாற்றுவார்.

இன்னிசை நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் இன்று எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, சமூகத் தொண்டு, ஒழுக்க நெறிமுறைகள் போன்றவற்றை பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை புத்தாக்கப்பயிற்சியும் நடைபெறும். பிற்பகல் 12- மணி முதல் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சர், கிருஷ்ணகிரி  மாவட்ட நிர்வாகம்  மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து