முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆதங்கம்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: கொசுவை ஒழிக்க கடவுளால் மட்டும்தான் முடியும், கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி உலகக் கொசுக்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 7,25,000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. என்ன செய்தாலும் கொசுவை ஒழிக்க முடியவில்லை.

கொசுவினால் பரவும் நோய்கள் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா முதலான மோசமான வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

 நாடு முழுதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு தானேஷ் லஷ்தன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் நாடு முழுதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கும் என நாங்கள் கருதவில்லை என்றனர்.

நாங்கள் கடவுள் அல்ல நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள் எனக்கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுள் தான் செய்ய முடியும் என்றனர். மேலும் கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து