மியான்மர் அகதிகளுக்கு காங்கிரஸ் நீலிக்கண்ணீர் வடிக்கிறது: தமிழிசை தாக்கு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      அரசியல்
tamilisai-soundararajan 2017 06 02

சென்னை, இலங்கை தமிழர்களை அகதிகளாக்கிவிட்டு மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக பேசி மதவாதத்தை தூண்டும் திருநாவுக்கரசரின் பேச்சு கண்டிக்கதக்கது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக பேசி மதவாதத்தை தூண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் பேச்சு கண்டிக்கதக்கது. ரோஹிங்கியா மக்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தொடர்பு குறித்து தகவல் அடிப்படையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அகதிகள் என்ற பெயரில் குடியேறும் தீவிரவாதிகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதால் தான் நாம் அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள சிந்தித்து செயல்படவேண்டி உள்ளது. அவர்களின் பின்புலம் நோக்கம் தெரியாமல் வெறும் இஸ்லாமியர் என்று பார்ப்பதை இங்குள்ளவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றார். இதனை முஸ்லிம்கள் என்பதால் கருணை காட்ட மறுப்பதாக சொல்லி மதசாயம் பூசி இருப்பதை அமைதியை விரும்பும் நம் நாட்டு இஸ்லாமிய சகோதரர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதே கருத்தை தான் இஸ்லாமிய நாடான பங்களாதேஷ் பிரதமரே சொல்வதால் அந்த நாடே ரோஹிங்கியா மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்புகிறது. ஏற்கனவே லட்சக்கணக்கான பங்களாதேஷ் அகதிகள் பிரச்சினை மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருப்பதாக கூறப்படும் நிலையில் மியான்மர் அகதிகள் என்ற புதுவரவு தேவையா என்ற எச்சரிக்கை தவறில்லையே. இதை வழக்கம்போல் மதத்தின் பெயரால் முன்னிறுத்துவதால் காங்கிரஸ் தான் மதவாத கட்சி என்பது நிதர்சனம். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் மதத்தை புகுத்தி பேசுவது தான் மதவாதம்.நம் தொப்புள்கொடி உறவுகள் ஆன இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு அளிக்கும் ஆதரவை மியான்மர் ரோஹிங்கியா மக்களுக்கு ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்கும் உமர் அப்துல்லாவை கண்டிக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?காஷ்மீர் பண்டிட்டுகள் நம் மண்ணில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டபோது அதை பற்றி கவலைப்படாதது அன்றைய காங்கிரஸ் ஆட்சி. அதேபோல் இலங்கையில் இருந்து போராடிய தமிழ் இனத்தை அழிக்க துணை நின்றது காங்கிரஸ்.நரேந்திர மோடி அரசை பாராட்டி துபாய் இளவரசர் அங்கே அவர்கள் நாட்டில் ஹிந்துக்கள் கோயில் கட்ட நிலம் வழங்குகிறார். வெளி நாடுகளில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் அப்பாவி இந்தியர்கள் குறிப்பாக பல தமிழர்கள் மரணத்தில் இருந்து காப்பாற்றியது மோடி அரசு. ஆக வேண்டும் என்றே வாக்கு வாங்கி அரசியலுக்காக சிறுபான்மை மக்களை திருப்தி படுத்தவே காங்கிரஸ் தலைவரின் அறிக்கை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து