முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியை சிறந்த கேப்டனான உருவாக்குகிறார் டோனி - ஆஸி. வீரர் வார்னர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை ஆஸ்திரேலிய துணை கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்பாட்டிற்கு ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘டோனி தனது கேப்டன் காலத்தில் மிகவும் அமைதியான வீரராக செயல்பட்டார். இதனால் அமைதியான கேப்டன் என்ற பெயரை பெற்றார். கேப்டனாக பல சாதனைகளை படைத்து சிறந்து விளங்கினார். அந்த பணியை தற்போதும் செய்து வருகிறார். விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வருகிறார். முன்னாள் கேப்டன் இப்படி செய்வது சிறப்பான விஷயம். டோனி விராட் கோலியை வளர்ப்பது இருவருக்கும் சிறப்பான விஷயம்.

விராட் கோலி அதிக அளவில் தோல்விகளை சந்தித்த கேப்டன் கிடையாது. ஆனால், அணி தோல்வியை சந்தித்து வரும்போதுதான் உண்மையான சவால்கள் அவரை எதிர்நோக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து