முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி - தொடரை கைப்பற்றியது

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில்  இந்தியா அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்தியா தொடரையும் கைப்பற்றி, ஐ.சி.சி.தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்தது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில், இந்தூரில் நேற்று (செப்.24) 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா அணி. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத ஆரோன் பின்ச் நேற்றைய போட்டியில் களமிறங்கினார். வார்னர் உடன் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பின்ச் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் நேரம் செல்லச்செல்ல அவரது ஆட்டத்தில் அபாரம் வெளிப்பட்டது. 61 பந்தில் அரைசதம் அடித்தார் ஆரோன் பின்ச். 34-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விளாசி சதம் அடித்தார். 110 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் சதத்தை கடந்தார். ஆரோன் பின்ச் 124 ரன்கள் அடித்த அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா தரப்பில், வார்னர் 42 ரன்கள் அடித்தார். ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 27 ரன்களும் அடித்தனர். மேக்ஸ்வெல், ட்ராவிஸ், ஆஷ்டன், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் சொற்ப ரன்களே அடித்தனர். இறுதியாக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 293 ரன்களை குவித்தது.

இந்தியாவுக்கு இலக்கு 294 ரன்கள்

தொடரை வெல்லும் வேட்கையுடன் இருந்த இந்திய அணிக்கு 294 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்தது.  அதன்பிறகு களம் இறங்கிய  இந்தியஅணியில்  தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ரகானே ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.  ரோகித் சக்மா 62 பந்துகளில் 71 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். பின்பு ரகானே உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட்கோலி  ஆட்டத்தை நிதானமாக ஆடினார். ராகனே 76 பந்துக்கு 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய கார்ட்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்து 72 பந்தில் 78 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

வழக்கம்போல்  டோனி களமிறங்கி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில்  ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி , அபார வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.  மேலும்  இந்த வெற்றிமூலம் இந்தியா தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து