முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 2 நாள் பா.ஜ.க தேசிய செயற்குழு தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில்நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2,000க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் மாநில பாஜக தலைவர்கள், 1400 எம்.எல்.ஏக்கள், 337 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அப்போது ஜிஎஸ்டி, கருப்பு பண மீட்பு விவகாரங்களில் மத்திய அரசு சாதித்தது எப்படி என்பது குறித்து பிரதம்ர் மோடி விவரிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து