முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா உட்பட8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு புதிய பயண தடை அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகொரியா உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு புதிய விதிமுறைகள் அடங்கிய பயண தடையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ளார்.

இதற்கான உத்தரவில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபரின் இந்த புதிய பயண தடை சாட், லிபியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் மீதும் ஈரான், வடகொரியா, சிரியா, வெனிசுலா, ஏமன் ஆகிய இன்னபிற நாடுகள் மீதும் பாய்ந்துள்ளது. இந்த தடை வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது.

இந்தப் புதிய பயண தடையின்படி ஏற்கெனவே பயண தடை விதிக்கப்பட்டிருந்த சிரியாவுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கான கட்டுபாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயண தடையில் வடகொரியா, வெனிசுலா ஆகிய நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

தடையை மீறி ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா மீது புதிய பொருளாதார தடையை அமெரிக்கா கொண்டு வந்த நிலையில் தற்போது பயண தடையையும் அந்நாடு மீது அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் இந்தப் பயண தடையில் சிறப்பம்சமாக வெனிசுலா நட்டின் அரசு அலுவலர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும் என்றும், பொது மக்களுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய பயண தடை குறித்து  அதிபர் டிரம்ப், "அமெரிக்காவில் நுழைவதற்கான பயண தடைகள் மிகப்பெரியது, கடுமையானது, இவை முட்டாள்தனமாகவும் இருக்கலாம். இந்த விதிமுறைகள் அரசியல் ரீதியாக சரியானதாக இருக்காது.
பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே எனது முதல் பணி. பயண தடை விதித்துள்ள நாடுகளை உள்ளே அனுமதித்தால் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டீல்லர்சன் கூறியபோது, "அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கான பணியையே அதிபர் டிரம்ப் செய்துள்ளார்” என்றார்.

லண்டனில் தொடர்ந்து நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அமெரிக்காவில் நுழைவதற்கான விதிமுறைகளை டிரம்ப் அதிகரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி 27-ம் தேதி உத்தரவிட்டார். பின்னர் இந்த உத்தரவிலிருந்து ஈராக் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து