முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் தூய்மையே சேவை பணிகளில் கலெக்டர் நடராஜன் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக்கும் பணிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் பங்கேற்றார்.
மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  சுவச்தா ஹே சேவா - தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பல்வேறு சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அந்தந்த பகுதி வாரியாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர அலுவலகம் மற்றும் அலுவலக வளாகம் ஆகியவற்றில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு சுத்தமாக பராமரிக்கப்பட அனைத்து துறை அரசு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில்;; மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மையே சேவை உறுதிமொழியினை பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். ‘மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ‘தூய்மையே சேவை” இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான, புதிய பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம் !
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்போம்! என்றும் வீடுகளில் இரட்டை உறிஞ்சி குழிகளுடன் கூடிய கழிப்பறைகளைக் கட்டுவதுடன், அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்டச் செய்து, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாக்க பாடுபடுவோம் ! என்றும் கழிப்பறை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாக கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிப்போம்! என்றும் குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின்படி திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்றும் உறுதி ஏற்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
அதன்பின்பு, மாவட்ட கலெக்டர் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை பணியாளர்களுடன் மேற்கொண்டு குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்.  மேலும் தூய்மையே சேவை விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி சுற்றுப்புறத் தூய்மை குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) பி.நடராஜன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து