Idhayam Matrimony

அரசினர் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான மாவட்ட திறனாய்வு போட்டி

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி -தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக்கழகம், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டி-2017 மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் (26.09.2017) இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், நமது மாநிலத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டவும், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நவீன தொழில்நுட்பம் சார்;ந்த எண்ணங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தினை ஏற்படுத்தவும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்படுகிறது. மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பாடங்களைக் கற்றுகொள்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு நடத்தப்படுகின்ற இந்த திறனாய்வு போட்டி வரவேற்கதக்கதாகும். மாணவர்கள் தொழிற்பயிற்சி முடித்தவுடன் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகள் கிடைக்கின்றன. நமது மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்;ச்சி விகிதம் கடந்த ஆண்டு 86 சதவீதமாக இருந்தது. தற்போது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. கல்வி கற்கும் மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். புரிதலுக்கான பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவிச்சந்திரன்  நிலைய மேலாண்மை குழுத்தலைவர் அமர்நாத்  மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சுப்பிரமணியன்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல்  பயிற்றுநர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து