முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை அன்னசமுத்திரம் கண்மாய்க்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு பல ஆண்டுக ளுக்கு பின் அகற்றம்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -நிலக்கோட்டை அன்னசமுத்திரம் கண்மாய்க்கு வரும் கால்வாய் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினார்கள். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள கொடைரோட்டில் அமைந்திருக்கும் அன்னசமுத்திரம் கண்மாய் இந்த கண்மாயானது இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர் ஆதாரப்பகுதிகளுக்கு இருதயம் போன்ற பகுதியாகும். இந்த அன்னசமுத்திரம் கண்மாய்க்கு தளி ஓடை வழியாக தான் தண்ணீர் வரவேண்டும். சுமார் 20 வருடமாக  தளி ஓடையில் கடுமையான ஆக்கிரமிப்பினால் அன்னசமுத்திரம் கண்மாயானது 20 வருடமாக பாலைவனம் போல் ஆகிவிட்டது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய்யிடம் இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றிதருமாறு கோரிக்கை மனு அளித்தார்கள். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அன்னசமுத்திரம் கண்மாயை பார்வையிட்ட தளி ஓடையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தார்;. அதன் பின்பு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் உதவி பொறியாளர் தங்கவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பின்பு கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் உதவி பொறியாளர் தங்கவேல் மற்றுமு; அதிகாரிகள் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 20 நாட்களாக ஜே.சி.பி, பெக்லைன் போன்ற நவீன இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அன்னசமுத்திரம் கண்மாய்க்கு நீர்வரும் பகுதியினை சீர்செய்து கொடுத்துள்ளார்கள். இதனால் சிறுமலை பகுதியில் பெய்யும் மழையானது தங்குதடையின்றி அன்னசமுத்திரம் கண்மாய்க்கு வந்து சேரும் இதனால் அம்மையாநாயக்கனூர் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்மை பெறுவார்கள். பல  ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்புகளை போர்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து கொடுத்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் மற்றும் அதனை செயல்படுத்தி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் உதவி பொறியாளர் தங்கவேல் மற்றும் அதிகாரிகளை இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து