முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நோயாளர் நலச் சங்க வருடாந்திர ஆய்வுக் கூட்டம்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

  தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நோயாளர் நலச்சங்க வருடாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தலைமையில் நடைபெற்றது.
நோயாளர் நலச் சங்க வருடாந்திர ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவிக்கையில், தமிழக அரசு பொது சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நோயாளர் நல நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் அடிப்படை மற்றும் அத்தியாவசிய செலவினங்கள் மற்றும் சிறு, சிறு உபகரணங்கள், பணியாளர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற மருத்துவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்றதினால் தான் தற்போது மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இப்பணியானது காலநேரத்தினை கணக்கிடாமல் சமூக நலனை கருத்தில் கொண்டு, ஏற்றதாழ்வு இன்றி உயர் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து கருத்து வேறுபாடின்றி பணியாற்றிட வேண்டும். மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து, வளமான ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கிட வேண்டும்.
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் 260 படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகளுக்கும், 1,200 வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கு நவீன மருத்துவ வசதிகளுடைய தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழக அரசினால் பொது சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வாழ்வில் வளம்பெற வேண்டும் என்று தெரிவித்ததோடு, அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும்; ஆய்வக வேதிப்பொருள்கள் வாங்கிய செலவினம், ஓ சுயல குடைஅ வாங்கிய செலவினம், ஊர்திக்கு டீசல் நிரப்பிய செலவினம் உட்பட பல செலவினங்கள் கடந்த ஆண்டு ரூ.10,56,267  க்கு செலவிடப்பட்டது. இந்த ஆண்டு ரூ.11,80,000 -க்கு செலவினங்கள் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதற்கான தீர்;மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ாவுக்கரசு அவர்கள், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) (பொ) மரு.செல்வராஜ் அவர்கள், துணை இயக்குநர் (சுகாதராரப்பணிகள்;) மரு.சண்முகசுந்தரம் அவர்கள், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.குமார் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல் அவர்கள், மாவட்ட விரிவாக்க மருத்துவ கல்வியாளர்  தி.பாண்டியம்மாள் அவர்கள், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனத்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து