கலெக்டர் வெங்கடாசலம் முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017      தேனி
theni news

 தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான  அ.கார்த்திக்,  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான  அ.கார்த்திக், இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சுகாதாரத்துறையினர், நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு டெங்கு குறித்து துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள், ஒலிபெருக்கி மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணிகள் நடத்திடவும், குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்தினை உரிய இடைவேளையில் தெளித்திடவும், குடிநீரில் குளோரின் கலந்து பொதுமக்களுக்கு வழங்கிடவும், மருத்துவ முகாம்கள் நடத்தி போதுமான சிகிச்சை வழங்கிடவும், நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கிடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 
மழை காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனவே கொசு உற்பத்தியாகும் இடங்களான சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர்த்தொட்டி, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், குடம், வாளி, திறந்த நீர் தொட்டி, காலி பெயிண்ட் டப்பா, டிரம்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குளர்சாதன பெட்டியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்திட வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் சேரும் தண்ணீரையும் சுத்தப்படுத்திட வேண்டுமு;. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுகளில் வலி, கண்களில் பின்புறம் வலி மற்றும் தோலில் சிறு, சிறு சிகப்பு தடிப்புகள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான  அ.கார்த்திக், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 
இக்கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்  திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  வடிவேல்  பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ)  தி.கிருஷ்ணவேணி   அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. ாவுக்கரசு  இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜ்  துணை இயக்குநர் (சுகாதார பணிகள்)  சண்முகசுந்தரம்  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப் ; மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ஞானசேகரன்  மாவட்ட வழங்கல் அலுவலர்  தி.ரசிகலா  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.மாரியப்பன்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து