முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்-கலெக்டர் தகவல்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான கால்நடைபாதுகாப்பு திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களை கலெக்டர் முனைவர் நடராஜன் அறிவித்துள்ளார்.
          கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் 2017 அக்டோபர் மாதத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ஆண்மை நீக்கம்,அறுவை சிகிச்சை, சினைப்பரிசோதனை, மலடு நீக்கச்சிகிச்சை, கருவூட்டல் ஆகிய அனைத்துப் பணிகளும் வழங்கப்படவுள்ளது.  மேலும் சிறந்த கன்றுகளுக்கு பரிசும் வழங்கப்படவுள்ளது. எனவே, முகாம்களில் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்கடைகளுக்குத் தேவையான அனைத்துப் பயன்களையும்  இம்முகாம்களில்  பெற்றுக்  கொள்ளலாம்.
 01.10.2017 அன்று போகலூர் ஊராட்சி ஒன்றியம், வீரவனூர் கால்நடை மருந்தகம், முதலூர்;; கிராமத்திலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி கால்நடை மருந்தகம், செட்டிகருப்பன்வலசை கிராமத்திலும், 05.10.2017 அன்று திருவாடானை ஊராட்சி ஒன்றியம், ஊரணிக்கோட்டை கால்நடை மருந்தகம், கீழக்கோட்டை கிராமத்திலும், 07.10.2017 அன்று போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் கால்நடை மருந்தகம், பொட்டிதட்டி கிராமத்திலும், 09.10.2017 அன்று நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், மூவலூர் கால்நடை மருந்தகம், காரடர்ந்தகுடி கிராமத்திலும், 10.10.2017 அன்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், ரெகுநாதபுரம் கால்நடை மருந்தகம், பத்திராதரவை கிராமத்திலும் நடைபெறவுள்ளன.
 11.10.2017 அன்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், சிக்கல் கால்நடை மருந்தகம், ஓடைகுளம் கிராமத்திலும், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், நயினார்கோயில் கால்நடை மருந்தகம், சிறகிக்கோட்டை கிராமத்திலும், மண்டபம்  ஊராட்சி ஒன்றியம், வாலாந்தரவை கால்நடை மருந்தகம், ராம்நகர்; (பட்டிணம்காத்தான்) கிராமத்திலும்,   திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கை கால்நடை மருந்தகம், பனையடியேந்தல் கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவெற்றியூர் கால்நடை மருந்தகம், திருவெற்றியூர் கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெருவாக்கோட்டை கால்நடை மருந்தகம், கூகுடி கிராமத்திலும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தொருவ@ர்; கால்நடை மருந்தகம், வன்னிவயல்; கிராமத்திலும், நடைபெறவுள்ளன.
 12.10.2017 அன்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், கொம்பூதி கால்நடை மருந்தகம், படிப்பான் கிராமத்திலும்,  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை கால்நடை மருந்தகம், வேளானூர் கிராமத்திலும், 13.10.2017 அன்று போகலூர்; ஊராட்சி ஒன்றியம், வீரவனூர்; கால்நடை மருந்தகம், எட்டிவயல் கிராமத்திலும், 16.10.2017 அன்று நயினார்கோயில்;; ஊராட்சி ஒன்றியம், பாண்டியூர் கால்நடை மருந்தகம், சிறுவயல் கிராமத்திலும்,17.10.2017 அன்று பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், கமுதக்குடி கால்நடை மருந்தகம், மேலப்பெருங்கரை கிராமத்திலும், 18.10.2017 அன்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கை கால்நடை மருந்தகம், கோவிலான்சாத்தான் கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், வெள்ளையாபுரம் கால்நடை மருந்தகம், கட்டிமங்களம் கிராமத்திலும், 19.10.2017 அன்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலக்கிடாரம் கால்நடை மருந்தகம், பெரியகுளம் கிராமத்திலும்,  மண்டபம்; ஊராட்சி ஒன்றியம், உச்சிப்புளி கால்நடை மருந்தகம், செட்டிப்பண்ணை கிராமத்திலும், 24.10.2017 அன்று ராமநாதபுரம்; ஊராட்சி ஒன்றியம், சித்தார்கோட்டை கால்நடை மருந்தகம், சிங்கனேந்தல் கிராமத்திலும், 25.10.2017 அன்று திருவாடானை  ஊராட்சி ஒன்றியம், திருவாடானை கால்நடை மருந்தகம், செங்கம்படை கிராமத்திலும், 26.10.2017 அன்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காக்கூர்; கால்நடை மருந்தகம், கிழவனேரி கிராமத்திலும் நடைபெறவுள்ளன.
 மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து