ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் சான்றிதழ் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017      விருதுநகர்
vnr news

 

விருதுநகர்.-ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாணவர்களுக்கு ஆழியார் அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்; மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் ஒரு வருட யோகா பயிற்சி நடைபெற்றது.
யோகா பயிற்சிகளை சீதா, பிருந்தா, ராஜாத்தி, ஆரவிந்தராஜ், புதியராஜ், அழகர்சாமி, ராஜேந்திரன், தியாகு, காளசாமி ஆகியோர் மாணவர்களுக்கு ஒலிஒளி மற்றும் செய்முறை வகுப்பு மூலம் பயிற்சி வழங்கினர்.
பயிற்சி முடித்த பி டெக், இரண்டு, மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் 586 பேருக்கு ஆழியார் அறிவுத்திருக்கோயில், சார்பில் யோகாவும், இளைஞர் வல்லமையும் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலசலிங்கம் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் முனைவர் பி. வெண்குமார் வரவேற்புரை வழங்கினார்.
ஆழியார் அறிவுத்திருக்கோயில் இயக்குநர் முனைவர் கே. பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், தலைவர் ராஜா சுடலைமுத்து, செயலாளர் ராமர், பொருளாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்
ஸ்ரீவி. மனவளகலைமன்ற அறக்கட்டளை பயிற்சியாளர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பயிற்றுநர் அரவிந்த் ராஜ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து