முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்ன?

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

ஸ்டாக்ஹோம் :  மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பெறவுள்ள 3 அமெரிக்க விஞ்ஞானிகள் உயிர் கடிகாரம் தொடர்பான கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை ஆற்றுவோருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
இதற்கான தேர்வு குழு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ளது. அங்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை அந்த குழுவின் தலைவர் தாமஸ் வெர்ல்மென் அறிவித்தார். மருத்துவ துறையில் ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

மூலக்கூறு தொடர்பான ஆய்வுக்காக இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான ரூ.7 கோடி 3 பேருக்கும் சமமாக பிரித்தளிக்கப்படும்.

மனிதனின் உயிர் கடிகாரம் பூமியின் சுழற்சியோடு சேர்ந்தே இயங்குகிறது என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு. அத்துடன் அந்த கடிகாரமே நமது தூக்கம், உண்ணும் முறை, ஹார்மோனை வெளியிடுதல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை முறைப்படுத்துவதாகவும் இவர்களது கண்டுபிடிப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து