தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் சிறப்பு கதர் விற்பனை: கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      தேனி
theni news

தேனி.- தேனி மாவட்டம், காமராஜர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் அங்காடியில் இன்று (02.10.2017) அண்ணல் காந்தியடிகளின் 149-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அண்ணல் காந்தியடிகள் ுருவபடத்திற்கு மாலை அணிவித்து, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் (காதிகிராப்ட்) சார்பில் சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சி;த்தலைவர் ந.வெங்கடாசலம்,   துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய கிராமப்புற கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக நூற்பு மற்றும் நெசவுத் தொழிலில் முழு நேரம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு, இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிரமப்புற கைவினைஞர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் போன்ற பெருந்தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் மாநில கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கதர் அங்காடிகளுக்கு 2016-ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரூ.33.00 இலட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.20.05 இலட்சத்திற்கு கதர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-ஆம் ஆண்டிற்கு ரூ.28.54 இலட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப்பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் கதர் ரகங்களை கடன் முறையில் வாங்கிப் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசால் சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. கதர் பட்டு, பாலிஸ்டர், உல்லன் இரகங்கள் மற்றும் ரெடிமேடு சட்டைகள், மெத்தைகள், தலையணைகள் ஆகியவற்றிற்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் கதர் அங்காடிகளில் ஆடைகளை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் தி.செ.பொன்னம்மாள்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்   குடிசைத் தொழில் ஆய்வாளர் (மதுரை) க.பெருமாள்   கதர் அங்காடி மேலாளர் எஸ்.சந்தான கிருஷ்ணமூர்த்தி   அரசு அலுவலர்கள் மற்றும் கதர் வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து