முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு நடத்தியவர் அறையிலிருந்து ஆயுத பாகங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தங்கியிருந்த ஒட்டல் அறையிலிருந்து ஆயுத பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துசெய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "இந்த ஆயுத பாகங்களை அவர் துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தியிருக்கலாம் என்றும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ஸ்டீபன் படாக் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் ‘மண்டாலே பே ரிசார்ட் அன்ட் கேசினோ’ (இந்த ஓட்டலிலிருந்துதான் படாக் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்) தங்க ஆரம்பித்துள்ளார்.

இங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியை நன்கு நோட்டமிட்டு இந்த படாக் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் ‘ரூட் 91 ஹார்வெஸ்ட்’ என்ற பெயரில் 3 நாள் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி செப்டம்பர் 29-ல் தொடங்கியது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு (உள்ளூர் நேரப்படி), ‘மண்டாலே பே ரிசார்ட் அன்ட் கேசினோ’ என்ற ஓட்டலுக்கு எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் ஜேசன் அல்தீன் பாடிக் கொண்டிருந்தார். இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது மண்டாலே பே ஓட்டலின் 32-வது மாடியிலிருந்த ஓர் அறையிலிருந்து படாக் துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டத்தில் 58 பேர் பலியாகினர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தற்போதைய நிலவரப்படி இந்தச் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனை போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.  துப்பாக்கி சூடு நடத்தியவரோடு ஒரேஆறையில் தங்கியிருந்த பெண் குறித்து போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து