முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்: ஜப்பானுக்கு வடகொரியா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அதிகரிக்குமாறு ஜப்பான் சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்திய நிலையில் அந்நாடு அணுஆயுத அழிவுகளை சந்திக்கும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, வடகொரியா அதன் அணுஆயித சோதனைகளை கைவிட சர்வதேச நாடுகள் பேச்சு வார்த்தை நடத்துவதைவிட அதன் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பான் பிரதமர் அபேயின் உரை குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியபோது, "ஜப்பான் பிரதமர் அபே அரசியல் நோக்கங்களுக்காக பொருளாதார நெருக்கடிகளை வடகொரியா மீது பயன்படுத்துகிறார்" என்றார்.

மேலும் வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்த ஜப்பான் அதன் ராக்கெட்களை வீசி வருகிறது. ஜாப்பான் அதன் மறைமுக நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அணு ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியுள்ளது.

முன்னதாக வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துவரும் அமெரிக்கா தனக்கு தானே அழிவை தேடிக் கொண்டிருக்கிறது என்று வடகொரியா எச்சரித்த நிலையில் ஜப்பானுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து