முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம் மகாத்மா காந்திகள் வந்தாலும் 125 கோடி மக்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தூய்மை இந்தியா இலக்கை அடைய முடியும் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே சுத்தமான இந்தியாவை உருவாக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, டெல்லி விக்யான் பவனில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஆயிரம் மகாத்மா காந்திகள்- நரேந்திரமோடிகள்- முதல்வர்கள்  -மாநில அரசுகள் வந்தாலும் 125 கோடி மக்கள்  இணைந்து செயல்பட்டால் மட்டுமே  தூய்மை இந்தியா இலக்கை அடைய முடியும்.
 -பிரதமர் நரேந்திர மோடி

நிகழ்ச்சியில் அவர் பேசியபோது: “சுத்தமான இந்தியாவின் முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்வதில் ஊடகங்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் முக்கியப் பங்காற்றினர். நாம் விரும்பிய இலக்கை தூய்மை இந்தியா இயக்கம் அடையவில்லை என்றாலும் இவர்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளாவிட்டாலும் அது ஏன் என்பது குறித்த ஆய்வு அவசியம்.

கழிப்பறை இல்லாமல் பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் தூய்மை இந்தியா பிரச்சாரத்தை பார்க்க வேண்டும். இந்த திட்டத்தின் தூதுவர்களாக குழந்தைகள் செயல்படுவது பாராட்டுக்குரியது. ஆயிரம் மகாத்மா காந்திகள், நரேந்திர மோடிகள், முதல்வர்கள், மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டாலும் சுத்தமான இந்தியா என்ற இலக்கை அடைய முடியாது.
நாட்டின் 125 கோடி மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இலக்கை அடைய முடியும். நம் நாடு உலகின் தலைசிறந்த நாடாக உருவெடுக்க தூய்மை பராமரிப்பு அவசியம். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தூய்மை பராமரிப்பவர்களின் ஊக்கத்தை கெடுக்க வேண்டாம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து