ராமநாதபுரம் மாவட்டத்தில் 11லட்சத்து 24ஆயிரத்து 679 வாக்காளர்கள்-கலெக்டர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை  திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக 2018-ஆம் ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியலினை கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 01.01.2018ம் தேதியினை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்கத் திருத்தம்-2018 மேற்கொள்ளப்படவுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்;டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,61,868 ஆண் வாக்காளர்களும், 5,62,744 பெண் வாக்காளர்களும், 67 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,24,679 வாக்காளர்கள் உள்ளனர். புகைப்பட வாக்காளர் துணைப்பட்டியல் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் அதாவது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுமையான புகைப்பட வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், ஊரகப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
 வாக்களார் பட்டியல் பெயரைச் சேர்ப்பதற்கு, இந்தியக் குடியினராய் இருத்தல் வேண்டும்.  01.01.2018 அன்று 18 வயது நிரம்பியவராகவும் (அதாவது 31.12.1999 அன்றோ அதற்கு முன்போ பிறந்தவராய் இருத்தல் வேண்டும்.  பதிவு செய்யக் கோரும் பகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். வாக்காளர்; புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க இயலாது. நீங்கள் குடியிருக்கும் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
 முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட (அதாவது உங்கள் பெயர் வேறெங்கும் பதிவு பெறாமலிருந்தால்) அல்லது ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் - படிவம் 6-ம், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட - படிவம் 6ஏம், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் - படிவம் 8ஏம், பெயரை நீக்க - படிவம் 7-ம், பெயர், வயது, பாலினம், உறவுமுறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய - படிவம் 8ம் சம்பந்தப்பட்ட நபர்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட வேண்டும்.  03.10.2017 (இன்று) முதல் 31.10.2017 வரை படிவம் - 6,7,8 மற்றும் 8யு பெறப்படும்.
 07.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகள் நடத்தப்பட்டு இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்படும். மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரு தினங்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி படிவம் - 6, 7, 8 மற்றும் 8யு பெறப்படும்.  படிவங்கள் 6  8 ஏ , 8 ஆகியவற்றின் வலது மேல்பக்க மூலையில் மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஒட்டப்பட ஏதுவாக ஒரு கட்டம் அச்சிடப்பட்டுள்ளது. வாக்காளரின் படம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தயாரிக்கவும் மனுதாரர் அளிக்கும் புகைப்படம் பயன்படுத்தப்படும்.
 படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலிருந்து பெறலாம்.  நடநஉவழைளெ.வn.பழஎ.in என்ற இணைய தளத்திலிருந்தும் இலவசமாக படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்த படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் சமர்ப்பிக்கலாம். உரிய படிவத்தில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடம் (பொதுவாக உங்கள் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி), வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் அளிக்கலாம். றறற.நடநஉவழைளெ.வn.பழஎ.in என்ற இணைய தள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
 முதன் முறையாக விண்ணப்பிப்போரைத் (அதாவது 18-24 வயதிலுள்ள மனுதாரர்கள்) தவிர, ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.  இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும் கூட, தற்போதைய முகவரியில் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருவதையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் (அல்லது) தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட வேண்டும்.
 முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிப்போரைத் தவிர,  மற்றவர்கள் அனைவரும் வாக்காளர் புகைப்பட அட்டை வைத்திருப்பதாகவே கருதப்படும். ஒரு நபருக்கு ஒரு முறை வழங்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, அந்நபர் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு வசிப்பிட மாற்றம் செய்தாலும் கூட, நாடு முழுவதிலும் செல்லுபடியாக தக்கதாகும். வாக்காளர் பட்டியலில் ஓரிடத்திற்கு மேல் தமது பெயரைப் பதிவு செய்ய முயல்கிற அல்லது தவறான தகவல்களைத் தருகிற எந்த ஒரு நபரும், 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 31-ன் விதித் துறைகளின் கீழ் குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக தக்கவராவர். வயது சான்றாக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்டின் நகல் அளிக்கப்படலாம்.  வசிப்பிட சான்றாக பின்வருவனவற்றுள் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
 வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்படும் போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்;த்து அளிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டு சரிபார்த்து அப்போதே திரும்பக் கொடுத்து விடுவார்.  எனவே, 6ஏ நேரில் அளிக்கப்படும் போது வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் மட்டுமே பெறப்படும்.   நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் பெறப்பட மாட்டாது.  6ஏ தபாலில் அனுப்பப்படும் போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
 விண்ணப்பங்களின் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிப்பதற்கு முன், அதில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொள்வார்.  03.10.2017 முதல் 31.10.2017 வரையுள்ள காலத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களின் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2018 அன்று வெளியிடப்படும். கோரிக்ககைள் மற்றும் மறுப்புரைகளின் பட்டியல் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும்.  ஆட்சேபணை ஏதுமிருப்பின் அப்பட்டியலை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அதிகாரியிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.முருகானந்தம், வருவாய் கோட்டாட்சியர்கள் (ராமநாதபுரம்) ரா.பேபி, (பரமக்குடி) அமிர்தலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து