4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      தேனி
theni news

  தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 198-ஆண்டிபட்டி,        199-பெரியகுளம் (தனி), 200-போடிநாயக்கனூர் மற்றும் 201-கம்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,  01.01.2018-ஐ தகுதி நாளாகக் கொண்டு 198-ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1,29,181 ஆண் வாக்காளர்களும், 1,30,626 பெண் வாக்காளர்களும், 21 இதர வாக்காளர்களும,; என மொத்தம் 2,59,828 வாக்காளர்களும், 199-பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,29,994 ஆண் வாக்காளர்களும், 1,33,926 பெண் வாக்காளர்களும் 100 இதர வாக்காளர்களும், என மொத்தம் 2,64,020 வாக்காளர்களும், 200-போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,688 ஆண் வாக்காளர்களும், 1,33,046 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,62,747 வாக்காளர்களும், 201-கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1,31,418 ஆண் வாக்காளர்களும், 1,36,222 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும், என மொத்தம் 2,67,668 வாக்காளர்களும், ஆக மொத்தம் மாவட்டத்தில் 5,20,281 ஆண் வாக்காளர்களும், 5,33,820 பெண் வாக்காளர்களும், 162 இதர வாக்காளர்களும், என மொத்தம் 10,54,263 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இப்பட்டியல் 03.10.2017 முதல் 31.10.2017 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.  பொதுமக்கள் மேற்கண்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்  சரியான விபரங்களுடன் இடம் பெற்றுள்ளதா? என உறுதி செய்து கொள்ளலாம்.
01.01.2018-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க  ்தம் 2018 அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும்  3.10.2017 முதல் 31.10.2017 வரையிலான வேலை நாட்களில்; காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரையிலும,; சிறப்பு முகாம் நாட்களான 08.10.2017 (ஞாயிறு) மற்றும்  22.10.2017 (ஞாயிறு) ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.  மேற்கண்ட நாட்களில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6;, பெயர் நீக்கலுக்கான படிவம் 7, விபரம்  ்துதலுக்கான படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தலுக்கான படிவம் 8யு ன் மூலம் பொதுமக்கள் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ச.ஞானசேகரன்  வருவாய் கோட்டாட்சியர்கள்  கார்த்திகேயன்   தி.இரா.ஆனந்தி  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  வட்டாட்சியர் (தேர்தல்)  தி.சத்தியபாமா  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து