திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் கு.ராசாமணி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      திருச்சி

 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, நேற்று (03.10.2017) வெளியிட மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.அபிராமி பெற்றுக்கொண்டார்.

 சுருக்கமுறை திருத்தம்

 ரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 01.01.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது. மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டத்தில் உள்ள 2505 வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 10,78,575 ஆண் வாக்காளர்களும், 11,31,112 பெண் வாக்காளர்களும், 185 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 22,09,872 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 1,31,758 ஆண் வாக்காளர்களும், 1,35,564 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,67,327 வாக்காளர்கள் உள்ளனர்.

 மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 1,41,195 ஆண் வாக்காளர்களும், 1,49,864 பெண் வாக்காளர்களும், 21 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,91,080 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1,25,826 ஆண் வாக்காளர்களும், 1,33,979 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,59,817 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,20,664 ஆண் வாக்காளர்களும், 1,26,921 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,622 வாக்காளர்கள் உள்ளனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 1,35,512 ஆண் வாக்காளர்களும், 1,38,648 பெண் வாக்காளர்களும், 50 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,74,210 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் குறைந்தபட்சமாக இலால்குடி சட்டமன்ற தொகுதியில் 1,01,463 ஆண் வாக்காளர்களும், 1,06,954 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,08,432 வாக்காளர்கள் உள்ளனர். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,09,865 ஆண் வாக்காளர்களும், 1,15,958 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,25,851 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி சட்டமன்ற தொகுதியில் 1,07,020 ஆண் வாக்காளர்களும், 1,11,679 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,18,712 வாக்காளர்கள் உள்ளனர். துறையூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,272 ஆண் வாக்காளர்களும், 1,11,545 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,16,821 வாக்காளர்கள் உள்ளனர்.

01.01.2018 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 03.10.2017 முதல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2018 நடைபெற உள்ளது. நேற்று (03.10.2017) வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 01.01.2000 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்காளர் பட்டியல்களை நிர்வகிப்பதில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி செய்வதற்கான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுகிறார்கள். அரசியல் கட்சியினரால் ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டு அந்நியமனம் திரும்பப் பெறப்படாத வரை அவரே அக்கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவராக செயல்படலாம். எனவே கட்சியால் ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டு அந்நியமனம் திரும்பப் பெறாத பாகங்களுக்கு புதிய வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஏதும் தேவையில்லை.

 நடைபெற உள்ள சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 விண்ணப்பங்களையும் இத்திருத்தக் காலம் முழுமைக்கும் அதிகபட்சம் 30 விண்ணப்பங்களையும் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். வரைவு வாக்காளர் வெளியிலும் நிகழ்ச்சியில் தேர்தல் வட்டாட்சியர் தமிழ்கனி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து