கோவையில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி 13,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      கோவை

வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சி ஐந்தாவது ஆண்டாக கோவையில் நடைபெற்றது. இம்மாரத்தான் நிகழ்சியில் 13,500 - க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கோயம்புத்தூர் ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர் தடகள சங்கம், ஆகியவற்றுடன் வோடாபோன் இணைந்து இந்த வோடாபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்ச்சியை நடத்தியது. இதன் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷன் ஏற்பாடு செய்யப்பட்டது. 21.1 கிமீ ஓட்டம் (பாதி மாரத்தான்), 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம், நடை என்று மூன்று பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டம்

முதலாம் போட்டியான 21.1 கி.மீ (அரை மாரத்தான்) பந்தயத்தை காலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷன், நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 2000 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வெல்லிங்டனை சேர்ந்த ஆர். பத்மநாபன், 01.10.33 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பெற்றார். ஜி.என். வினோத் 01.11.06 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். டி. நிகில் 01.12.02 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் வசந்தா மணி 01.29.45 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். கே. சுகுணா 01.30.39 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். வி.சோனியா 01.36.00 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் முகமது இட்ரிஸ் 01.24.01 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். போஸ்கோ 01.32.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். நஞ்சுன்டன் 01.34.36 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் மீனாட்சி சங்கர் 02.05.35 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். ஊர்மிளா சுரானா 02.11.31 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். தொடர்ந்து ரக்ஷனா பட்டேல் 02.24.04 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.இரண்டாம் போட்டியான 10 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 6.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் தமிழ்நாடு துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்), மணிஷ் சிங்கால் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இதில் 4,700 பேர் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் பி.கிரண் 00.31.52 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், எம். ராஜ்குமார் 00.32.00 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், சுரேஷ்குமார் 00.32.33 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் பானுப்பிரியா 00.44.48 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், திவ்ய லட்சுமி 00.45.51 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா 00.46.59 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் டி.எம்.நாராயணன் 00.43.43 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், பி. பாண்டுரங்கன் 00.43.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், ஜெயகுமார் 00.44.29 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் ஆர்.லட்சுமி 00.49.28 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், கே.ஆர்.தீபா 01.08.50 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், கீதா பாலு 01.09.21 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். மூன்றாம் போட்டியான 5 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 7.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் கோயம்புத்தூர், மண்டல தலைவர், நவீன் சந்தரன் நாயர் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 7,100 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து