குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருவாய் வட்டாட்சியர் ஜான்சிராணி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      கடலூர்
kurinjippadi 2017 10 03

குறிஞ்சிப்பாடி தாலுக்கா அலுவலகத்தில்  வரைவு வாக்காளர் பட்டியல் வட்டாட்சியர் ஜான்சிராணி  வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் செல்வமணி தேர்தல் துணை உதவி அலுவலர் மணிவண்ணன் மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரீதர்  ஆகியோர் உடன் இருந்தனர். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் 6 ஜனவரி 2017 ஆண்டு முதல் 2 அக்டோபர்  2017 வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு பொதுமக்கள் பார்வைக்காக குறிஞ்சிப்பாடி தாலுக்கா அலுவலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 156 குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பட்டியல் படி 251பாக  மொத்த வாக்காளர்கள்  2 லட்சத்து 29 ஆயிரத்து 813 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 755 ம் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து  16 ஆயிரத்து 49 ம் திருநங்கைகள் 9 பேரும் வாக்காளர் பட்டியல்  இடம் பெற்று உள்ளது இதில் ஏதேனும் திருத்தம் செய்யவோ புதிய வாக்காளர்பெயர் சேர்க்க பெயர் நீக்கம் செய்ய குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பு முகவரி மாற்ற கலர் புகைபடம் மாற்ற 3 அக்டோபர் மாதம் முதல் 31 அக்டோபர் மாதம் முடிய உரிய ஆவணம் உடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் பொதுமக்கள் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற 8 ம் தேதியும் 22 ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு வட்டாட்சியர் கேட்டுகொண்டார்கள்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து