மறைமாவட்ட கிறிஸ்தவ மக்கள் திருப்பயணம்

siva news

காரைக்குடி, -காரைக்குடி அருகே தேவகோட்டை சாலையில் உள்ள தூய அருளானந்தர் ஆலயம் ஆனந்தா அருங்கொடை மையத்தில் சிவகங்கை மறைமாவட்ட கிறிஸ்தவ மக்கள் திருப்பணம் நடந்தது. சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்டம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மறைமவாட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு திருப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தாண்டு முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேவகோட்டை ரஸ்தாவில் அமைந்துள்ள ஆனந்தா ஆருங்கொடை மையத்தில் இளையோரை இறையாட்சிக்காக ஆற்றல்படுத்துவோம் என்னும் மையப்பொருளை இறைமக்களின் சிந்தனைக்கு கொடுத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்படி சிவகங்கை மறைமாவட்ட கிறிஸ்தவ மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு தேவகோட்டை ரஸ்தாவில் அமைந்துள்ள ஆனந்தா அருங்கொடை மையத்தில் நேற்று ஒன்று கூடினர். காலை 9 மணிக்கு இறைவழிபாட்டுடன் தொடங்கி. சேபமாலை செபத்துடன், நற்கருணை ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து மறi மாவட்ட ஆயர் மேதகு சூசைமாணிக்கம் தலைமையில், முதன்மைகுரு பேரருள் ஜோசப் லூர்துராஜா, மறiமாவட்ட பொருளர் அருள்பணி, சந்தியாகு, மறைமாவட்ட முதன்மை செயலாளர் அருள்பணி, பாக்கியநாதன், செக்காலை பங்குந்தந்தை வின்சென்ட் அமல்ராஜ், மறைமாவட்ட அதிபர்கள், வியான்னி அருள்பணி மைய இயக்குனர் மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத் திருபலி நிறைவேற்றினர். திருப்பலியின் இறுதியில் இறை ஊழியர் லூயிலெவே பெயரில் இணையதள முகவரியை ஆயர் வெளியிட்டார். மறைமாவட்ட பணிக்குழுக்கள் நடத்திய மறைமாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். 450க்கும் மேற்பட்ட குருக்கள், 200க்கும் மேற்பட்ட அருள் சகோதரிகள் மற்றும் 9000க்கு மேல் கிறிஸ்த்தவ மக்கள் ஒன்று கூடி கூட்டுவழிபாடு செய்தனர். அனைத்து மக்களின் அமைதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் சிறப்பு பிராத்தனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து