பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      சினிமா
NARIVETTAI 0

Source: provided

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் திரைக்குவர தயார் நிலையில் உள்ளது.

கதைசுருக்கம் : பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’ என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரில் முக்கிய நான்கு பேரால் ஒரு பெண் கொடுக்கப்படுகிறார். அந்த பெண்ணின் நிலைமை என்ன, அந்த நான்கு பேர் என்ன ஆனார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.இது ஆதாரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்ட திரைப்படம்.


இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்  இயக்குனர் ஆகாஷ் சுதாகர்.இப்படத்தின் புதுமுக கதாநாயகனாக ஆகாஷ் சுதாகர் அறிமுகம். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் மகாலட்சுமி அறிமுகமாகிறார்.இவர்களுடன் நெல்லை சிவா, போன்டா மணி, கிங்காங், கிளிமூக்கு ராமசந்திரன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை அதன் சுற்றுபுறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் நான்கு பாடல்களை இசையமைப்பாளர் சார்லஸ் தனா இசையமைக்கிறார். பாடல்களை கவிதா, ஜானகி ஐயர், மாணிக்க விநாயகம், மற்றும் அஸ்வின் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தாகம் தீர்க்கும்

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுவோருக்கு எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.

3-டி பிரிண்ட் பாலம்

உலகில் முதன்முதலாக நெதர்லாந்தில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

மிகவும் சிறந்தது

குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்

பாதுகாப்பது அவசியம்

சிறுத்தை இனம் அழிந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 7,100 சிறுத்தைகள் உள்ளன. இவை வாழ்வதற்கு ஏற்ப தேவையான இடங்களோ, சரணாலயங்களோ இல்லை. இதனால் அவைகள் காடுகளை விட்டு வெளியே வரும் சூழ்நிலையில் மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலேயே அதன் இனம் அழிய காரணமாக இருக்கிறது.

புரிதல் சுலபம்

ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன்.

உயரமான இடத்தில்...

மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலையில் சிகரங்களில் ஏறுவதற்காகக் கூடும் (கடல்மட்டத்தில் இருந்து 5,360 மீ (17,600 அடி) உயரத்தில் உள்ள ) பேஸ் கேம்ப் பகுதியில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இது நிறுவப்பட்டால் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை வசதியாக அமையும்.

புதிய மென்பொருள்

தேவையற்ற வீடியோவைத் தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரே மேட்டிக்ஸ் என்ற நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிடப்படும் மனதை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்களை தடுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் பணியாற்றும் மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. இது தேவையற்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிடமுடியாத வகையில் 95 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.

அறிவோம் சிறுநீரகம்

சிறுநீர் பாதையில் அழற்சி என்பது மருத்துவ துறையில் பொதுவாக காணப்படும் ஒரு குறியீடு. மூத்திரம் வரும் பாதையிலும், சில நேரம் மூத்திர பையிலும் அழற்சி ஏற்படலாம். இதற்கு சிஸ்டைடிஸ் என்று பெயர். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தை தாக்கும் போது அது செயலிழக்க வாய்ப்பு அதிகம்.

சமையலுக்கு மட்டுமல்ல...

இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.