முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்  ரமணி.

சென்னையைச் சேர்ந்த பிரபல.நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.  உண்மையைச்  சொல்ல வேண்டும் என்பதற்காக  தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்புடத்தக்கது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி,பெருதுளசிபழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக   சந்தோஷ், நடித்திருக்கிறார்கள்.படத்தைப் பார்த்து பிரமித்த கீழக்கரை அஜ்மல்கான் , இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து