முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-  மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கியதுடன் வீதிவீதியாகச் சென்று டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு பரவிடாமல் தடுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.இதற்காக நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஒன்றிணைந்து தினம் தோறும் வீடுவீடாகச் சென்று கொசு மருந்து புகையடித்தல் மற்றும் தெளித்தல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல்,டெங்குவை பரப்பிடும் ஏடிஸ் கொசு லார்வாக்களை அபேட் மருத்து ஊற்றி அழித்தல் போன்ற பணிகள் நகராட்சியிலுள்ள 27வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நேற்று முன்தினம் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உரையாற்றினார்.
இதனையடுத்து திருமங்கலம் நகரில் பொதுமக்களுக்கு டெங்கு பரவிடாமல் தடுத்திடும் வகையில் நிலவேம்பு கஷாயம் வழங்கிடும் முகாம்கள் நகரின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று காலை திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்பு கஷாயம் வழங்கிடும் முகாமினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.பின்னர் திருமங்கலம் பேருந்துநிலையம்,மதுரை ரோடு,விருதுநகர் ரோடு ஆகிய பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்து சென்று பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் துண்டு பிரசுரங்களை வழங்கி டெங்கு பரவிடாமல் தடுத்திட ஒத்துழைப்பு தந்திடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த விழப்புணர்வு நிகழச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் நகர அவைத்தலைவர் ஜஹாங்கிர்,முன்னாள் நகர்மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி,நகராட்சி பொறியாளர் சக்திவேல்,நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ்மோகன்,சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து